Posts

Showing posts with the label story

பெத்த மனம் பித்து.. பிள்ளை மனம் கல்லு..

பக்கத்து அறையில் நோய்வாய்பட்டிருந்த கமலாவின் முனகல் சத்தம் கேட்டது.. "கா... சி.. காசி........" காசியின் முகத்தில் கவலை ரேகை.. ஆம் கமலாவின் ஒரே மகன் காசி.. சிறு வயது முதல் அவனை கஷ்டபட்டு வளர்த்தவள்.. அவனை நல்ல படிப்பு படிக்க வைத்தவள்.. இப்போது காசி ஒரு தனியார் நிறுவனத்தில் 10,000 சம்பளம் வாங்கும் நல்ல வேளையில் இருந்தான்.. ஆனால் காசிவின் தற்போதைய கவலையின் முக்கிய காரணம்.. தாயின் மீதுள்ள பாசத்தை காட்டிலும் பணத்தின் மீதுள்ள மோகம்... "அப்பா..... கா.... சி...." கடந்த வாரம்தான் தாயை மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றான்.. பல விதமான பரிசோதனைகளை செய்த டாக்டர் எதோ வாயில் நுழையாத வியாதியின் பெயரை கூறினார்.. செலவு மட்டும் கிட்டதட்ட எட்டாயிரம் ரூபாய் ஆகிவிட்டது.. இப்போது கமலா தொடர்ந்து இருமுவதை கேட்ட காசிக்கு மீண்டும் செலவு செய்ய வேண்டுமே என்ற கவலை.. கமலா திரும்ப திரும்ப அவனை அழைத்துப்பார்த்து ஒய்ந்தாள்.. அடுத்த நாள் காலை காசி அருகில் வந்து அவன் தலையை கோதிக்கொண்டே கேட்டாள் கமலா "என்னப்பா காசி.. உடம்புக்கு ஏதும் நோவு வந்துட்டா?.. இராத்திரி முழுக்க உன் அறை விளக்கு எறிஞ்சுகிட்டு...

அம்மா என்றழைக்காத உயிர் இல்லையே..

"பத்திரிக்கைகாரங்களாம் வந்துட்டாங்க சார்" உள்ளறையில் குழந்தையை கொஞ்சிக்கொண்டிருந்த அமுதனிடம் கூறினார் அவரது P.A. சீதாராம். 'இன்றைய இளைய சமுதாயத்தின் super star', 'வளர்ந்து வரும் தொழிலதிபர்', 'அடுத்த பில்கேட்ஸ்' போன்ற தலைப்புகளுடன் அமுதனின் பேட்டிக்காக காத்திருந்தனர் பத்திரிக்கைகாரர்கள். அமுதன் வந்தவுடன் அனைவருக்கும் வழங்கப்பட்ட உணவு,உபசரிப்புகளின் குறை,நிறைகளைப் பற்றி விசாரித்து விட்டு தன் இருக்கையில் அமர்ந்தார் 35 வயது மதிக்கத்தக்க அமுதன். கேள்வி : "சார் உங்க வெற்றியின் காரணம் என்ன?" அமுதன் அமைதியாக பதில் சொல்ல ஆரம்பித்தார். நான் என் வெற்றிக்கான காரணமாக கருதும் 3 விஷயங்கள் முதலாவதா punctuality- எந்த ஒரு சந்தர்ப்பத்துலயும் நான் நேரம் தவறுனது இல்ல, இதையே எங்கிட்ட வேலை பாக்குறவங்களுக்கும் சொல்லி புரியவைச்சுருக்கேன். அடுத்ததா நேர்மை.. தவறான வழியில் கோடி ரூபா லாபம் வந்தாலும் வேண்டாம்னு சொல்லிடுவேன்... மூனாவதா perfection-- எந்த ஒரு வேளைய செஞ்சாலும் அத முழுசா செய்யனும்.. அரைகுறை வேலைகள நான் கண்டிப்பா ஏத்துக்கிறது இல்ல.. "கடைசியா என் வெற்றிக்கு...

கல்யாணம்

"அம்மாவுக்கு என்னப்பா ஆச்சு? என்ன ஏன் உடனே கிளம்பிவரச் சொன்னிங்க?" வீட்டிற்க்குள் நுழைந்தவுடன் கேட்டான் ஆனந்த். வீட்டின் திண்ணையில் வாயில் வெற்றிலையுடன் அமர்ந்திருந்த அவன் தந்தை சிரித்துக்கொண்டே சொன்னார். "அம்மாவுக்கு எதுவும் இல்ல... நல்லாத்தான் இருக்கா.. உனக்குத் தான் கல்யாணம்" என்று. அவரையே வெறித்து பார்த்துக்கொண்டிருந்தான் ஆனந்த். பெரியவர் தொடர்ந்து சொன்னார்.. "உன் மாமன் போன வாரம் Singapore ல இருந்து வந்துட்டான்.. இனிமே அவனுக்கும் லீவு கிடைக்குறது கஷ்டம்.. எனக்கும் வயசாயிடுச்சு.. அதான் முன்னாடியே முடிவு செஞ்சபடி உனக்கும் சக்திக்கும் கல்யாணம் பண்ணி வைக்க முடிவு பண்ணிட்டோம்.. நாளைக்கு பரிசம் போடுறோம்.." இந்த திடீர் முடிவை கேட்ட ஆனந்த் செய்வதறியாது நின்றான். அவனுக்கு தலை சுற்றியது. அவன் தன்னுடன் வேலை பார்த்து வந்த பத்ராவை உயிருக்குயிராய் நேசித்தான். தந்தையிடமும், மாமாவிடமும் எவ்வளவோ சொல்லிப் பார்த்தான். அவர்கள் பிடிகொடுக்கவில்லை. அன்றிரவு தூங்காமல் யோசித்தான்.. பத்ராவின் முகம் அவன் மனதிற்குள் தோன்றித் தோன்றி மறைந்தது.. புரண்டு புரண்டு படுத்தவன் திடீரென எ...

கடன்

பஸ்சை விட்டு இறங்கும் போது , ஒரு முரட்டு கரம் , அவனது சட்டை காலரை பற்றி இழுக்க , வேகமாக திரும்பியவன் வெலவெலுத்து போக , அவனிடம் கடன் கேட்டு , ஒரு மாசமாக அலைந்து கொண்டிருக்கும் , ரவி நின்றிருந்தான் .

சாதிகள் இல்லையடி பாப்பா

"கீழ் சாதி பையல கல்யாணம் பண்ணிக்கிட்ட உன் பெரியம்மாவ வெட்டிட்டு jail க்குப் போனவன்டி நான்" சக்தியை பார்த்து கர்ஜித்தார் பெரியவர் மாரிமுத்து... "அவன விட அழகும், அந்தஸ்தும் அதிகம் உள்ள மாப்பிள்ளையா நம்ம ஜாதில நான் உனக்கு பாக்குறேன் டா மா.. அவன மறந்துடு" பாட்டியின் வாதம் இது.. "சக்தி! இத்தன வருஷமா இதுதான் உனக்கு சரிவரும்னு பார்த்து பார்த்து செஞ்ச எங்களுக்குத் தெரியாது?.. உனக்கு யார கல்யாணம் பண்ணி வைக்கனும்னு?" சித்தப்பா அவளை பார்த்து கோபத்துடன் கேட்டார்... "அம்மாடி.. சக்தி.. இன்னுமா நீ பிடிவாதமா இருக்க? பெரியவங்க சொல்றத கேளுமா" என்றபடி சக்தியின் தலையை கோதினாள் தாய் மீனாக்ஷி.. "ஏன்டா.. சுந்தரம்.. உன் பொண்ணுக்கு நாங்க எல்லாரும் advice பண்ணிகிட்டு இருக்கோம்.. நீ பேசாம tuition எடுத்துகிட்டு இருக்க?" தம்பியிடம் கேட்டார் சக்தியின் பெரியப்பா வீரபத்ரன்.. "இல்லண்ணே... கல்யாணம் என் பொண்ணு சக்திக்கா?.. இல்ல... உங்க எல்லாருக்குமானு யோசிச்சுகிட்டு இருக்கேன்?" என்றார் சுந்தரம் அமைதியாக.. குழந்தைகள் அவர் வார்த்தைகளுக்கு பின்னணி இசைபோல் அன்று...

வாரிசு

Image
மனைவி இறந்து இன்றோடு பதினாறு நாட்கள் ஆச்சு. கேசவன் அப்படியே மனசுடஞ்சு ஈசி சேரில் சாய்ந்திருந்தார். ஆனால், அவர் கண்களின் ஓரமாய் கண்ணீர் மட்டும் கசிந்து கொண்டிருந்தது. "அப்பா.. நான் அம்மா நினைவா, அவள் கட்டியிருந்த புடவை எல்லாத்தையும் எடுத்துக்கரேன்பா" என்றாள் சுந்தரி. "சுந்தரியக்கா.. அம்மா உசுரோட இருக்கறப்பவே... 'ஏண்டி நளினி நான் செத்ததுக்கப்புறம் என்னோட நினைவா இந்த பித்தளை அண்டாவை எடுத்துக்கோன்னு' சொல்லியிருக்கா. அதனால, பித்தளை அண்டாவை வச்சிக்கிட்டாவது, அம்மாவை நான் ஞாபகம் வச்சிக்கறேன்" என்றாள் தங்கை மீனா. "அப்பா.. அம்மா சாக கிடந்த சமயத்துல, என் காலத்துக்கு அப்புறம் நான் போட்டுருக்கிற இந்த தாலிஸ் செயினை நீதாண்டா எடுத்துக்கணும்னு அம்மா சொல்லியிருக்கா.. அதனால.. அம்மாவோட நினைவா அந்தச் செயினை நானே வச்சிக்கறேன்பா." "சரிடா கண்ணா.. பீரோல உள்ள பச்சைக் கலர் டப்பாவுலதான் அந்த செயின் இருக்கு. பார்த்து எடுத்துக்கோ.."என்று சின்ன பையன் முரளியிடம் சொன்னார் அப்பா. "ஏண்டா.. பாபு நீ எதையும் அம்மா நினைவா எடுத்துக்கலையா?" என்றாள்...

சாக்லேட்

Image
''எ ன் காலைத் தொட்டுக் கும்புடு... அப்பதான் நான் ஒப்புக்கிடுவேன்.'' ''நோ... நான்தான் தேங்க்ஸ்னு சொல்றேன் இல்லே.'' ''உன் டேங்ஸைத் தூக்கி ஒடப்புல போடு. நீ ஆசைப்பட்டியேன்னு உங்க டாடிகிட்ட சொல்லி, மம்மிகிட்ட கெஞ்சி, அந்த சாக்லேட்டை உனக்கு வாங்கிக் கொடுத்தேன் பாரு. அதுக்கு...'' ''ஓ.கே! தேங்க்ஸ்... தேங்க்ஸ்... தேங்க்ஸ்! மூணு தேங்க்ஸ் போதுமா?'' ''அதுக்குப் பதிலா ஒரே ஒரு தடவை என் காலைத் தொட்டுக் கும்புடு, போதும்!'' ...

யார் அல்பம்?

இஸ்திரிக்காரன் தந்துவிட்டுப்போன உடைகளை வாங்கிப்பார்த்தான் சங்கர்.. அவனும் குழந்தைகளும் வேண்டாம் என்று ஒதுக்கிவிட்ட பழைய துணிமணிகள்.. "பழைய துணிகளை இஸ்திரி போட்டு புதுத்துணியாகக் காட்டித்தான் பிலாஸ்டிக் பக்கெட் வாங்கணுமா? அல்பத்தனமான இந்த சூழ்ச்சி எதற்கு?" - யோசித்தவனுக்கு மனைவி வாணி மீது கோபம் வந்தது.. வெளியே சென்றிருந்தவள் வீடு திரும்பியதும் கேட்டான் சங்கர்.. "அய்யோ அதுக்கில்லீங்க... அனாதை ஆசிரமத்துலயிருந்து துணி கேட்டு வந்தாங்க. இன்னிக்கு வரச்சொன்னேன். பாவம்.. அவங்களுக்கு புதுத்துணி உடுத்துறதுக்குத் தான் கொடுப்பினை இல்லை. நாம கொடுக்கறதையாவது சலவை செஞ்சு இஸ்திரி போட்டுக்கொடுத்தா சந்தோஷமா உடுத்திக்குவாங்கல்ல!!" வாணி சொல்ல, "இந்த யோசனை எனக்கு தோணலியே?"" யோசித்தான் சங்கர்..

a cute story

Image
சு வரில் கம்பீர மிடுக்குடன் சிரித்துக்கொண்டு இருந்த சீனிவாசனை ஆழ்ந்த அமைதியோடு பார்த்துக்கொண்டு இருந்தார் சீனிவாசன். காக்கி உடைக்கே உரிய மிதமான திமிர்; லேசாக எட்டிப் பார்க்கும் வீராப்பு; பதினேழு வருடங்களுக்கு முன்பு எடுத்த புகைப்படத்தைப் பார்க்கையில் சீனிவாசனுக்குப் பெருமூச்செறிந்தது. ராட்டினக் கடைகளையும் பலூன் வியாபாரிகளையும் தொலைத்துவிட்டு, முடிந்துபோன திருவிழாவைப் போல தன் வீடு அமைதியில் ஆழ்ந்துபோனதில் சீனிவாசனுக்கு ஆற்ற முடியாத வருத்தம். உள்ளே உஷா இருமுகிற சத்தம் கேட்டது. எட்டிப் பார்த்தார். வாசலில் சுருண்டுகிடந்த டைகர் ஓடி வந்து, அதன் பங்குக்கு அக்கறையாக இருப்பது போல வாலாட்டிவிட்டுப் போனது. இருமல் தாங்காமல் உஷாவின் உடல் குலுங்கக் குலுங்க, சீனிவாசனுக்குச் செத்துவிடலாம் போலிருந்தது. உஷாவின் தலைமாட்டில் உட்கார்ந்த உடனேயே பொத்துக்கொண்டு வந்துவிட்டது, அதுவரை தாக்குப்பிடித்து வைத்திருந்த கண்ணீர். ''என்னடா உச்சு... நெஞ்சுக்குத் த...