"கீழ் சாதி பையல கல்யாணம் பண்ணிக்கிட்ட உன் பெரியம்மாவ வெட்டிட்டு jail க்குப் போனவன்டி நான்" சக்தியை பார்த்து கர்ஜித்தார் பெரியவர் மாரிமுத்து... "அவன விட அழகும், அந்தஸ்தும் அதிகம் உள்ள மாப்பிள்ளையா நம்ம ஜாதில நான் உனக்கு பாக்குறேன் டா மா.. அவன மறந்துடு" பாட்டியின் வாதம் இது.. "சக்தி! இத்தன வருஷமா இதுதான் உனக்கு சரிவரும்னு பார்த்து பார்த்து செஞ்ச எங்களுக்குத் தெரியாது?.. உனக்கு யார கல்யாணம் பண்ணி வைக்கனும்னு?" சித்தப்பா அவளை பார்த்து கோபத்துடன் கேட்டார்... "அம்மாடி.. சக்தி.. இன்னுமா நீ பிடிவாதமா இருக்க? பெரியவங்க சொல்றத கேளுமா" என்றபடி சக்தியின் தலையை கோதினாள் தாய் மீனாக்ஷி.. "ஏன்டா.. சுந்தரம்.. உன் பொண்ணுக்கு நாங்க எல்லாரும் advice பண்ணிகிட்டு இருக்கோம்.. நீ பேசாம tuition எடுத்துகிட்டு இருக்க?" தம்பியிடம் கேட்டார் சக்தியின் பெரியப்பா வீரபத்ரன்.. "இல்லண்ணே... கல்யாணம் என் பொண்ணு சக்திக்கா?.. இல்ல... உங்க எல்லாருக்குமானு யோசிச்சுகிட்டு இருக்கேன்?" என்றார் சுந்தரம் அமைதியாக.. குழந்தைகள் அவர் வார்த்தைகளுக்கு பின்னணி இசைபோல் அன்று...