வைகறைப் பொழுது வாசலில் நீர் தெளித்து கோலமிடும் பெண்கள்! மகரந்த பூக்கள்! படர்ந்திருக்கும் கொடிகள் அனைத்திலும் வசந்தத்தின் வாசனை! கொல்லைப் புறத்தில் இருந்து அம்மா என்றழைக்கும் கன்றின் குரல்! பச்சை வயல்கள்! வெள்ளை நாரைக்கூட்டம் இயற்க்கையின் எழிலை ரசித்தபடி அமர்ந்திருந்தேன்! அப்பப்பா! எத்தனை அழகு உன் படைப்புகள் அனைத்தும்! "குவா.. குவா..." அருகில் இருந்த குப்பைத்தொட்டியில் அழுதபடி ஒரு பிஞ்சு.... இறைவா! இதுவும் உன் படைப்புதானே!