சில கிறுக்கல்கள்

கவிதைகள் எழுதுவேன்..

நடுவே வார்த்தைகள்

கிடைக்காது போனால்

உன் பெயரை எழுதுவேன்

அட..

கவிதைக்குள் கவிதை என

அசந்து போவேன்...

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

காதலை சொன்னேன்

காத்திருக்கிறேன்...

எனக்கு இடம்

உன் மனதிலா?

கல்லறையிலா?

என்று....

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

கறுப்பும் அழகுதான்.

என்னவள்

தலை கோதும் போது...

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

என் முகத்தை

உன் அகத்தில் காண

இந்த ஜகத்தில்

நேரம் வருமா?

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

நிலவு..

நிலவுக்கு மறுபெயர்

அம்புலியாம்..

அழும் குழந்தைக்கு

அமுதூட்டுவதனாலோ?..

Comments

Popular posts from this blog

குடும்பம்

இதுதான் கலியுகமோ?

What do world leaders quote about our country!!!!