அம்மா......

ஊனை உயிராக்கி
உதிரத்தைப் பாலாக்கிய
உத்தமியே!!
கருணையில் கடலாகி
கள்ளமில்லா மனமாகிய
கலையே!!
அன்பின் பொருளாகிய
அமைதியின் விளக்கமாகிய
அன்னையே!!
பாசத்தில் வானாகி
பாரெல்லாம் போற்றுதற்குரிய
பாவையே!!
ஆயிரம் உறவிருந்தாலும்
அன்னையைப் போல் ஓர் உறவுண்டோ!!
சிநேகமாய் அனைத்தும் அன்னையே
அன்னை என்பவள் தெய்வம்
அவள் காலடிதொழுவது புனிதம்!!

Comments

Popular posts from this blog

குடும்பம்

இதுதான் கலியுகமோ?

What do world leaders quote about our country!!!!