வாரிசு

மனைவி இறந்து இன்றோடு பதினாறு நாட்கள் ஆச்சு. கேசவன் அப்படியே மனசுடஞ்சு ஈசி சேரில் சாய்ந்திருந்தார். ஆனால், அவர் கண்களின் ஓரமாய் கண்ணீர் மட்டும் கசிந்து கொண்டிருந்தது.


"அப்பா.. நான் அம்மா நினைவா, அவள் கட்டியிருந்த புடவை எல்லாத்தையும் எடுத்துக்கரேன்பா" என்றாள் சுந்தரி. "சுந்தரியக்கா.. அம்மா உசுரோட இருக்கறப்பவே... 'ஏண்டி நளினி நான் செத்ததுக்கப்புறம் என்னோட நினைவா இந்த பித்தளை அண்டாவை எடுத்துக்கோன்னு' சொல்லியிருக்கா. அதனால, பித்தளை அண்டாவை வச்சிக்கிட்டாவது, அம்மாவை நான் ஞாபகம் வச்சிக்கறேன்" என்றாள் தங்கை மீனா.


"அப்பா.. அம்மா சாக கிடந்த சமயத்துல, என் காலத்துக்கு அப்புறம் நான் போட்டுருக்கிற இந்த தாலிஸ் செயினை நீதாண்டா எடுத்துக்கணும்னு அம்மா சொல்லியிருக்கா.. அதனால.. அம்மாவோட நினைவா அந்தச் செயினை நானே வச்சிக்கறேன்பா."


"சரிடா கண்ணா.. பீரோல உள்ள பச்சைக் கலர் டப்பாவுலதான் அந்த செயின் இருக்கு. பார்த்து எடுத்துக்கோ.."என்று சின்ன பையன் முரளியிடம் சொன்னார் அப்பா.


"ஏண்டா.. பாபு நீ எதையும் அம்மா நினைவா எடுத்துக்கலையா?" என்றாள் அக்கா.


"அம்மா நினைவா நான் அப்பாவ என் கூட கூட்டிண்டு போறேன்.. அவரு இருக்குற வர என் கூடவே கண் கலங்காம நான் பாத்துக்கப்போறேன்." என்றதும், சம்மட்டியால் அடித்தது போன்று இருந்தது மற்றவர்களுக்கு.


பாபுவின் இந்த வார்த்தையைக் கேட்டுக்கொண்டு அதே ஈசி சேரில் கண்ணீருடன் சாய்ந்திருந்தார்.. ஆனால் இப்போது அவர் கண்ணில் ஆனந்த கண்ணீர்..

Comments

Popular posts from this blog

மகள்..

முடிவு....

பாரதி.....