அம்மா என்றழைக்காத உயிர் இல்லையே..

"பத்திரிக்கைகாரங்களாம் வந்துட்டாங்க சார்" உள்ளறையில் குழந்தையை கொஞ்சிக்கொண்டிருந்த அமுதனிடம் கூறினார் அவரது P.A. சீதாராம்.

'இன்றைய இளைய சமுதாயத்தின் super star', 'வளர்ந்து வரும் தொழிலதிபர்', 'அடுத்த பில்கேட்ஸ்' போன்ற தலைப்புகளுடன் அமுதனின் பேட்டிக்காக காத்திருந்தனர் பத்திரிக்கைகாரர்கள்.

அமுதன் வந்தவுடன் அனைவருக்கும் வழங்கப்பட்ட உணவு,உபசரிப்புகளின் குறை,நிறைகளைப் பற்றி விசாரித்து விட்டு தன் இருக்கையில் அமர்ந்தார் 35 வயது மதிக்கத்தக்க அமுதன்.

கேள்வி : "சார் உங்க வெற்றியின் காரணம் என்ன?"

அமுதன் அமைதியாக பதில் சொல்ல ஆரம்பித்தார். நான் என் வெற்றிக்கான காரணமாக கருதும் 3 விஷயங்கள்

முதலாவதா punctuality- எந்த ஒரு சந்தர்ப்பத்துலயும் நான் நேரம் தவறுனது இல்ல, இதையே எங்கிட்ட வேலை பாக்குறவங்களுக்கும் சொல்லி புரியவைச்சுருக்கேன்.

அடுத்ததா நேர்மை.. தவறான வழியில் கோடி ரூபா லாபம் வந்தாலும் வேண்டாம்னு சொல்லிடுவேன்...

மூனாவதா perfection-- எந்த ஒரு வேளைய செஞ்சாலும் அத முழுசா செய்யனும்.. அரைகுறை வேலைகள நான் கண்டிப்பா ஏத்துக்கிறது இல்ல..

"கடைசியா என் வெற்றிக்கு பின்னாடி இருக்குறவங்கள பத்தி சொல்றேன் எழுதிக்கோங்க" என்றதும் அனைவரின் கண்களும் அமுதனை உற்று நோக்கின.

"ஆமாங்க! எங்கிட்ட இந்த பழக்கங்களாம் வந்துச்சுனா அது எங்க அம்மா சின்ன வயசுலேர்ந்து சொல்லி கொடுத்ததும், அவங்கள பார்த்து கத்துகிட்டதும் தான்"

அனைவரின் உள்ளங்களிலும் அவரவர் தாயின் முகங்கள் தோன்றின..

Comments

Popular posts from this blog

குடும்பம்

இதுதான் கலியுகமோ?

What do world leaders quote about our country!!!!