யார் அல்பம்?

இஸ்திரிக்காரன் தந்துவிட்டுப்போன உடைகளை வாங்கிப்பார்த்தான் சங்கர்.. அவனும் குழந்தைகளும் வேண்டாம் என்று ஒதுக்கிவிட்ட பழைய துணிமணிகள்..


"பழைய துணிகளை இஸ்திரி போட்டு புதுத்துணியாகக் காட்டித்தான் பிலாஸ்டிக் பக்கெட் வாங்கணுமா? அல்பத்தனமான இந்த சூழ்ச்சி எதற்கு?" - யோசித்தவனுக்கு மனைவி வாணி மீது கோபம் வந்தது..

வெளியே சென்றிருந்தவள் வீடு திரும்பியதும் கேட்டான் சங்கர்..

"அய்யோ அதுக்கில்லீங்க... அனாதை ஆசிரமத்துலயிருந்து துணி கேட்டு வந்தாங்க. இன்னிக்கு வரச்சொன்னேன். பாவம்.. அவங்களுக்கு புதுத்துணி உடுத்துறதுக்குத் தான் கொடுப்பினை இல்லை. நாம கொடுக்கறதையாவது சலவை செஞ்சு இஸ்திரி போட்டுக்கொடுத்தா சந்தோஷமா உடுத்திக்குவாங்கல்ல!!" வாணி சொல்ல,

"இந்த யோசனை எனக்கு தோணலியே?"" யோசித்தான் சங்கர்..

Comments

Popular posts from this blog

குடும்பம்

இதுதான் கலியுகமோ?

What do world leaders quote about our country!!!!