பாரதி.....
யாமறிந்த புலவரிலே கம்பனைப் போல் வள்ளுவர்போல், இளங்கோ வைப்போல்,
பூமிதனில் யாங்கணுமே பிறந்ததிலை;
உண்மை, வெறும் புகழ்ச்சி யில்லை;
என்று பாடிய கவியே!
கம்பனை போல, வள்ளுவன் போல, இளங்கோ போல, பூமிதனில் பிறந்த வாணி வரம் பெற்ற முண்டாசுக்கவியே!
"நண்பனாய், மந்திரியாய், நல்லாசிரியனுமாய்
பண்பிலே தெய்வமாய் பார்வையிலே சேவகனாய்
எங்கிருந்தோ வந்தான் இடைச்சாதி யென்று சொன்னான்!! இங்கிவனை யான் பெறவே என்ன தவஞ்செய்துவிட்டேன்!!
கண்ணன் எனதகத்தே கால் வைத்த நாளாய்
எண்ணம், விசாரம் ஏதுமவன் பொறுப்பாய்ச்
செல்வம், இளமாண்பு, சீர், சிறப்பு, நற்கீர்த்தி
கல்வி, அறிவு, கவிதை, சிவயோகம்
தெளிவே வடிவாம், சிவஞானம் என்னும்
ஒளிசேர் நலமனைத்தும் ஓங்கி வருகின்றன காண்!
கண்ணனை நான் ஆட்கொண்டேன்! கண் கொண்டேன்! கண் கொண்டேன்!
கண்ணனை ஆட்கொள்ளக் காரணமும் உள்ளனவே!"
கண்ணன் என் சேவகன் என்று இப்படி கொஞ்சி கவி பாடிய பாரிவேந்தே!!
ஏகாதசி வைகறை பொழுதில் அந்த கண்ணன் உனை அட்கொண்டானே!!
"வேதநூல் பழிக்கும் வெளித்திசை மிலேச்சர்
பாதமும் பொறுப்பளோ பாரத தேவி?" என்று சுதந்திர வேட்கை விதைத்த வீரகவியே! இன்று வரலாற்றை புரளி செய்யும் ஈன ஆட்சியரை வெளுத்து எடுக்க இல்லாமல் போனாயே!!
"என்ன தவம் செய்தனை யசோதா"!! என்று கண்ணன் மீது நீ கர்வம் கொண்டாய்..
என்ன தவம் நான் செய்தேனோ ! நின் அழகிய தமிழ் பாக்கள் படிக்க!. உன் தமிழை வழிபட!
"கண்ணன் முகம் மறந்துபோனால் - இந்த
கண்களிருந்து பயனுண்டோ" போன்ற உந்தன் பா அமுதங்களை படிக்காத
கண்களிருந்து பயனுண்டோ??
11 செப் 1921.. தமிழ்கூறும் நல்உலகின் சக்ரவர்த்தி! உண்மையான முத்தமிழ் அறிஞர்! தேசியம், சுதேசியம், ஆன்மிகம், புரட்சி என்ன பன்முகம் கொண்ட உண்மையான பகுத்தறிவு பகலவன்..
ஶ்ரீ ஶ்ரீ ஶ்ரீ.. His Highness.. திரு பாரதியார் நூற்றாண்டு நினைவு நாள்!!!
இந்த பதிவை படிக்கும் நண்பர்களுக்கு சிறிய வேண்டுகோள்..
உங்கள் குழந்ைகளுக்கு ஒரு பாரதி கவிதையும்.. திருக்குறளும் நிச்சயம் சொல்லி கொடுங்கள்!! யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்!!!
Comments
Post a Comment