கல்யாணம்

"அம்மாவுக்கு என்னப்பா ஆச்சு? என்ன ஏன் உடனே கிளம்பிவரச் சொன்னிங்க?" வீட்டிற்க்குள் நுழைந்தவுடன் கேட்டான் ஆனந்த்.

வீட்டின் திண்ணையில் வாயில் வெற்றிலையுடன் அமர்ந்திருந்த அவன் தந்தை சிரித்துக்கொண்டே சொன்னார். "அம்மாவுக்கு எதுவும் இல்ல... நல்லாத்தான் இருக்கா.. உனக்குத் தான் கல்யாணம்" என்று.

அவரையே வெறித்து பார்த்துக்கொண்டிருந்தான் ஆனந்த்.

பெரியவர் தொடர்ந்து சொன்னார்.. "உன் மாமன் போன வாரம் Singapore ல இருந்து வந்துட்டான்.. இனிமே அவனுக்கும் லீவு கிடைக்குறது கஷ்டம்.. எனக்கும் வயசாயிடுச்சு.. அதான் முன்னாடியே முடிவு செஞ்சபடி உனக்கும் சக்திக்கும் கல்யாணம் பண்ணி வைக்க முடிவு பண்ணிட்டோம்.. நாளைக்கு பரிசம் போடுறோம்.."

இந்த திடீர் முடிவை கேட்ட ஆனந்த் செய்வதறியாது நின்றான். அவனுக்கு தலை சுற்றியது. அவன் தன்னுடன் வேலை பார்த்து வந்த பத்ராவை உயிருக்குயிராய் நேசித்தான். தந்தையிடமும், மாமாவிடமும் எவ்வளவோ சொல்லிப் பார்த்தான். அவர்கள் பிடிகொடுக்கவில்லை.

அன்றிரவு தூங்காமல் யோசித்தான்.. பத்ராவின் முகம் அவன் மனதிற்குள் தோன்றித் தோன்றி மறைந்தது.. புரண்டு புரண்டு படுத்தவன் திடீரென எழுந்தான். ஒரு முடிவுக்கு வ்ந்தவனாய்..

'ச்சே! அம்மாவுக்கு சீரியஸாயிருக்குன்னு என்னை ஏமாற்றியவர்களை ஏமாற்றுவது தவறல்ல.!' என எண்ணியவன் புறப்பட எத்தணிக்கையில் "இப்படி பண்ணிட்டாளே! பாவி" என கூச்சலும், ஒப்பாரி சத்தமும் கேட்கவே ஓடிச்சென்று பார்த்தான்.

அங்கே மாமாவும்,அத்தையும் அழுது கொண்டிருக்க, அவர்கள் கையில் ஒருகடிதம்.. ஆனந்தின் கண்ணில் கண்ணீர்.
அது ஆனந்தக் கண்ணீரா? இல்லை அனுதாபக் கண்ணீரா? என்பது வாசகர் சாய்ஸ்...

Comments

Popular posts from this blog

குடும்பம்

இதுதான் கலியுகமோ?

What do world leaders quote about our country!!!!