Posts

Showing posts from November 4, 2026

ஸ்ரீ ஸ்ரீ இராம பாமாலை

🔱 ஸ்ரீ ஸ்ரீ இராம பாமாலை பல்லவி ஸ்ரீ ஸ்ரீ இராமா! ஜெய ராமா! ரகுகுலத் திலகா! ஹரி ராமா! தர்மம் காக்கும்! ஜெய ராமா! சீதையின் பதியே! ஹரி ராமா! சரணம் 1 – அயோத்தி கொண்டாடும் பால இராமன் கோசலை பெற்ற தவப்பயனே! குலங்கள் கொஞ்சிய திருமகனே! மக்கள் மகிழ்ச்சி பொங்கிடவே! தசரத மைந்தன் பிறந்தானே! சிசுவாய் ஹரியும் வந்தா ராம்! வேள்வியில் உதித்த பாலக ராம்! தசரதர் மகிழ்ச்சியில் களித்தா ராம்! தங்கத்தை வாரிப் பொழிந்தா ராம்! (பல்லவி) சரணம் 2 – அயோத்தியின் செல்லப் பாலகன் நால்வரும் செய்த குறும்பினிலே! உலகம் மகிழ்ந்து சிரித்ததுவே! அழகிய அயோத்தி நகர்தனிலே! அனைவரும் போற்றிட வளர்ந்தானே! மாதர் தாயாய் உன்னைச் சுமந்தன ராம்! மண்ணில் படாமல் தாங்கின ராம்! மலரடி தாங்கிட ஏங்கின ராம்! மாந்தர் மனதில் அன்பாய் வளர்ந்தவ ராம்! (பல்லவி) சரணம் 3 – கல்வி கேள்வி கற்ற இராமன் குருகுல கல்வி கற்றானே! வேதங்கள் யாவும் உணர்ந்தானே! விசுவாமித்திரர் துணையுடனே! அம்பெய்யும் கலையில் சிறந்தானே! முனிவர்கள் போற்றிய மாணிக்க ராம்! மூவுலகமும் வியக்கும் கோமள ராம்! குருமொழி போற்றிய புத்திர ராம்! கோதண்டம் ஏந்திய ராகவ ராம்! (பல்லவி) சரணம் 4 – ஜானகி மனம் கவர...