ஸ்ரீ ஸ்ரீ இராம பாமாலை
🔱 ஸ்ரீ ஸ்ரீ இராம பாமாலை
பல்லவி
ஸ்ரீ ஸ்ரீ இராமா! ஜெய ராமா! ரகுகுலத் திலகா! ஹரி ராமா! தர்மம் காக்கும்! ஜெய ராமா! சீதையின் பதியே! ஹரி ராமா!
சரணம் 1 – அயோத்தி கொண்டாடும் பால இராமன்
கோசலை பெற்ற தவப்பயனே!
குலங்கள் கொஞ்சிய திருமகனே!
மக்கள் மகிழ்ச்சி பொங்கிடவே!
தசரத மைந்தன் பிறந்தானே!
சிசுவாய் ஹரியும் வந்தா ராம்! வேள்வியில் உதித்த பாலக ராம்!
தசரதர் மகிழ்ச்சியில் களித்தா ராம்! தங்கத்தை வாரிப் பொழிந்தா ராம்!
(பல்லவி)
சரணம் 2 – அயோத்தியின் செல்லப் பாலகன்
நால்வரும் செய்த குறும்பினிலே!
உலகம் மகிழ்ந்து சிரித்ததுவே!
அழகிய அயோத்தி நகர்தனிலே! அனைவரும் போற்றிட வளர்ந்தானே!
மாதர் தாயாய் உன்னைச் சுமந்தன ராம்! மண்ணில் படாமல் தாங்கின ராம்!
மலரடி தாங்கிட ஏங்கின ராம்!
மாந்தர் மனதில் அன்பாய் வளர்ந்தவ ராம்!
(பல்லவி)
சரணம் 3 – கல்வி கேள்வி கற்ற இராமன்
குருகுல கல்வி கற்றானே!
வேதங்கள் யாவும் உணர்ந்தானே! விசுவாமித்திரர் துணையுடனே! அம்பெய்யும் கலையில் சிறந்தானே!
முனிவர்கள் போற்றிய மாணிக்க ராம்! மூவுலகமும் வியக்கும் கோமள ராம்! குருமொழி போற்றிய புத்திர ராம்! கோதண்டம் ஏந்திய ராகவ ராம்!
(பல்லவி)
சரணம் 4 – ஜானகி மனம் கவர்ந்த இராமன்
மிதிலை நகருக்கு வந்தானே!
ஜானகி மனதினைக் கவர்ந்தானே! சிவதனுசை முறித்துச் சிறந்தானே! சுந்தர ராமனும் வந்தானே!
காதலில் இரு மனம் இணைந்தன ராம்! மிதிலையில் அனைவரும் மகிழ்ந்தன ராம்!
தேவர்கள் மலர்கள் தூவின ராம்! சீதையை மணந்த சீதா ராம்!
(பல்லவி)
சரணம் 5 – வனவாசம் சென்ற இராமன்
தந்தையின் வாக்கைக் காத்திடவே!
அரச வாழ்வைத் துறந்தானே!
சீதையும் இளவலும் இருபுறமே! அறத்தின் வழியில் நடந்தானே!
குகனோடு ஐவர் ஆனவ ராம்!
காட்டில் எளிமையாய் வாழ்ந்தா ராம்! ராவணன் சீதையைக் கவர்ந்தா ராம்! இலங்கையில் சிறையில் வைத்தா ராம்!
(பல்லவி)
சரணம் 6 – அனுமன் துணையுடன் சென்ற இராமன்
அனுமனை வழியில் கண்டாரே!
அன்புத் தொண்டனாய் ஏற்றாரே!
வானரப் படையின் துணையுடனே! இலங்கையை நோக்கிப் சென்றாரே!
கடலைக் கடந்து சென்றா ராம்! இராவணன் கோட்டையை வென்றா ராம்! தர்மம் காத்து நின்றா ராம்!
ஜானகி மீட்டு வந்தா ராம்!
(பல்லவி)
சரணம் 7 – பட்டாபிஷேக இராமன்
அயோத்தி மீண்டும் வந்தாரே!
அன்பர் மனதில் மகிழ்ச்சி தந்தாரே!
பரதன் பாதுகை பணிந்து நின்றானே!
பட்டத்து அரசனாய் அமர்ந்தாரே!
அற வழி ஆட்சி செய்தா ராம்!
உலகம் போற்றும் உத்தம ராம்!
இராம ராஜ்ஜியம் தந்தா ராம்!
சரணம் சரணம் ஜெய ஜெய ராம்!
(பல்லவி)
Comments
Post a Comment