கருவரையில் கடுகளவு இருந்த என்னை கருத்தூண்றி வளர்த்தவளே.. என் தாயே.. கண்டித்து வளர்த்தாலும் கண் இமை போல என்னை காத்தவரே.. என் தந்தையே.. வம்புக்கும் பஞ்சமில்லை.. அன்புக்கும் பஞ்சமில்லை.. தோழியான சகோதரியே.. வழிகோலுங்கள்.. உங்களை போல் என்னை காதலிக்கும் என்னவளும் நம் குடும்பம் எனும் கவிதை கூண்டுக்குள் வர...
கவிதைகள் எழுதுவேன்.. நடுவே வார்த்தைகள் கிடைக்காது போனால் உன் பெயரை எழுதுவேன் அட.. கவிதைக்குள் கவிதை என அசந்து போவேன்... ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ காதலை சொன்னேன் காத்திருக்கிறேன்... எனக்கு இடம் உன் மனதிலா? கல்லறையிலா? என்று.... ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ கறுப்பும் அழகுதான். என்னவள் தலை கோதும் போது... ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ என் முகத்தை உன் அகத்தில் காண இந்த ஜகத்தில் நேரம் வருமா? ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ நிலவு.. நிலவுக்கு மறுபெயர் அம்புலியாம்.. அழும் குழந்தைக்கு அமுதூட்டுவதனாலோ?..
mm
ReplyDeleteEngae selkirathu enraiya naadu???
ReplyDelete